

நோக்கம் : சுற்றுலா மேம்பாடு மற்றும் உறுப்பினர் முன்னேற்றத்தை
உள்ளடக்கிய மாமதுரையின் வளர்ச்சி.
எது மாமதுரை ? மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம்.
இயற்கை மற்றும் தொழிலின் அடையாளமாக பச்சை மற்றும் நீல நிறங்களையும், பண்டைய பாண்டிய தேச அடையாளமாக மீன் சின்னமும், தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் அடையாளமாக காளையின் முகத்தையும் அடையாள குறியீடயங்களாக கொண்டுள்ளது மாமதுரையர்.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளில் வச ிப்பவர்கள் அல்லது இவற்றை பூர்வீகமாக கொண்டவர்கள்.

18 வயதுக்கு மேற்பட்ட மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளை பூர்வீகமாக கொண்ட அல்லது வசிப்பவர்கள் உறுப்பினராக இணையலாம்.

நேற்று நிகழ்வு, இன்று நினைவு !
விழிப்புணர்வு விதைக்கும் நிகழ்வுகள்
- ஏப். 15, செவ்.Madurai

மாமதுரையர் இயக்கம் – ஒரு அறிமுகம்
பொதுவாக மக்களிடேயே ஒற்றுமை என்பது நாடு சார்ந்து, மொழி சார்ந்து இனம் சார்ந்து ஏற்படும், அதே போல் ஊர் சார்ந்தும் ஏற்படும் அதிலும் நமது ஊர் சார்ந்த ஒற்றுமை என்பது “நாங்கல்லாம் மதுரை” என்று பெருமையுடன் இணைவதாக இருக்கும். எனவே ஊர் சார்ந்த ஒற்றுமையை அடிப்படையாக கொண்டு 2014 ஆம் ஆண்டு மே மாதம் திரு.ஜே.கே. முத்து அவர்களால் சமூகவலைத்தளம் மற்றும் வாட்சாப் குழுவாக நிறுவப்பட்ட அமைப்பு, 25 நவம்பர் 2023 இல் களப்பணி ஆற்றும் இயக்கமாக மாறியது, மாமதுரையர் அகிலஉலக தலைவராக முனைவர். க. திருமுருகன் நிறுவனரால் நியமிக்கப்பட்டார்.
மாமதுரையர் அமைப்பின் செயல் திட்டங்கள்

முக்கிய தலங்களின் அருமை பெருமைகளை வீடியோக்களாக, சேனல்கள் மூலம், உலகமுழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கப்படும்.

மாமதுரையை சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.

பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.

உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.

தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவது ஊக்குவிக்கப்படும்.

தமிழ் காக்க, தமிழ் வளர்க்க "5 ஆம் தமிழ்ச்சங்கம்" செயல்படுத்தப்படும்.

போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையாக ஜொலிக்க வைக்க முயற்சிக்கப்படும்.

முடங்கும் நிலையில் உள்ள பாரம்பரிய தொழில் வணிகங்களை புனரமைக்க அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் மீட்டெடுக்க முயற்சிக்கப்படும்.

தன்னார்வ உறுப்பினர்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் உருவாக்கி செயல்படுத்தப்படும்.

பல்வேறு பகுதிகளில் பாரம்பரியம், பெருமை மற்றும் வரலாற்றை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற முயற்சிக்கப்படும்.

தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்கள் உருவாக்க முயற்சிக்கப்படும்.

“வற்றாத வைகை” திட்டம் மூலம் நீர்நிலைகள் மேம்படுத்தப்படும்.